ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி குறித்த அப்டேட்

6 months ago 19

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 'வேட்டையன்' திரைப்படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்திலும் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் மீண்டும் ரஜினிகாந்த் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த்-இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது 'தளபதி' படம். மகாபார கதையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்த படத்திற்காக 34 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகுமீண்டும் மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது. இதே போல மணிரத்னம் -ரஜினிகாந்த் கூட்டணி இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ரஜினியின் பிறந்தநாளில் கூலி படத்தின் அப்டேட் மற்றும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் ஆகியவை வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article