ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி திருவொற்றியூர் கோயிலில் மகள் சவுந்தர்யா பிரார்த்தனை

4 months ago 29

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தை முடித்து விட்டு, 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தொடர் படப்பிடிப்பு காரணமாக ரஜினிகாந்துக்கு உடல் சோர்வு இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ம் தேதி மாலை ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டி அவரது மகள் சவுந்தர்யா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடத்தினார்.

Read Entire Article