
சென்னை,
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் வருகிற 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.