ரஜினிகாந்திடம் 'இந்தியன்' பட கதை கூறும்போது வைக்கப்பட்ட தலைப்பு எது தெரியுமா?

2 months ago 13

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'இந்தியன்'. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கஸ்தூரி சங்கர், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவ்வாறு மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தில் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்திற்காக உருவாக்கி இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாது.

அப்போது, 'பெரிய மனுஷன்' என்ற பட தலைப்பில் ரஜினிகாந்திடம் இந்தியன் பட கதை கூறப்பட்டிருக்கிறது. இதில், நடிக்க ரஜினிகாந்திற்கு விருப்பம் இருந்தும் முன்னதாக ஒப்பந்தமாகிய படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்யுள்ளது.

பின்னர், இப்படத்தின் தலைப்பு இந்தியன் என மாற்றப்பட்டு அதில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். இப்படத்தின் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, இதன் 3-ம் பாகம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article