தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம்

4 hours ago 2

சென்னை,

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66045) நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66046) விழுப்புரம்- விக்கிரவாண்டி இடையே நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் விக்கிரவாண்டி ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.54 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article