ரஜினி பட தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்

2 hours ago 1

சென்னை: ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு நடித்த ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வெச்சா’, சத்யராஜ் நடித்த ‘பங்காளி’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக் கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், பிரபு நடித்த ‘பசும்பொன்’, எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘நதியைத் தேடி வந்த கடல்’ ஆகிய படங்களை தயாரித்தவர், ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன் (70).

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி ஜோதி, மகன்கள் செந்தில், விக்கி ஆகியோர் இருக்கின்றனர். இன்று மாலை 4 மணியளவில், மயிலாப்பூர் சுடுகாட்டில் வி.நடராஜனின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

The post ரஜினி பட தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article