ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை: நடிகர் அல்லு அர்ஜூன் பேட்டி

4 weeks ago 6

திருமலை: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு விளக்கமளித்து நடிகர் அல்லு அர்ஜூன் நேற்றிரவு அளித்த பேட்டியில் கூறியதாவது: மூன்றாண்டுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு நடித்து எடுத்த படம் புஷ்பா. ரசிகர்களின் விருப்பங்களை, அவர்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது? வரவேற்பு எப்படி இருக்கிறது? என்பதை ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் தியேட்டரில் ரசிகருடன் சென்று பார்ப்பது வழக்கம். இந்த அசம்பாவிதம் நடந்த தியேட்டரில் கடந்த 20 ஆண்டுகளாக 30 சினிமா வெளியானபோது. முதல் நாளே அதே தியேட்டரில் சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே இந்த விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகளவில் ரசிகர்கள் இருந்ததால் போலீசாரும் அங்கிருந்த பவுன்சர்களும் ஒருமுறை வெளியே வந்து நீங்கள் ரசிகர்களுக்கு முகத்தை காண்பித்து கையசைத்தால் அவர்கள் சென்று விடுவார்கள் என கூறினார்கள். அதனால் தான் தியேட்டருக்கு மிக அருகில் கார் செல்லும்போது நான் காரில் இருந்து ரூப் டாப்பில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளை உயர்த்தி அவர்களின் வரவேற்பை ஏற்றேன். சினிமா தொடங்கிய சில மணி நேரத்திற்கு பிறகு வெளியே கூட்டம் அதிகமாக இருக்கிறது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுவதாகவும், எனவே நீங்கள் செல்ல வேண்டும் என எனது பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.

எனவே அங்கிருந்து நான் எனது மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். அப்போதும் போலீசார் நான் செல்வதற்கு வழியை ஏற்பாடு செய்தனர். இந்த இடைவெளியில் ஒரு ரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொண்டதாக நிறைய தவறான தகவல்கள் உள்ளன. இவை தவறான குற்றச்சாட்டுகள்.

இது அவமானகரமானது. எனது குணநலன் படுகொலை. என்னைப்பற்றி நிறைய தவறான தகவல்கள் , நிறைய பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது தனிப்பட்ட முறையிலோ, அரசியல் ரீதியாகவோ, அரசையோ நான் குற்றம் சாட்டவில்லை. என்னை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததால் அதற்கு விளக்கம் அளிக்கின்றேன். எனக்கு அரசு அனுமதி வழங்கினால் இப்போது கூட நான் அவர்கள் குடும்பத்தை சென்று சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை: நடிகர் அல்லு அர்ஜூன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article