ரசாயன நுரையால் பொதுமக்கள் பாதிப்பு

4 hours ago 2

ஓசூர், ஏப்.29: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை, காற்றில் பறந்து பொதுமக்கள் மீது படர்வதால் உடல் அரிப்பு ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே, அணைக்கு நீர் வரத்து உயர்வதும், குறைவதுமாக இருக்கும். மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால், கெலவரப்பள்ளி அணையில் ரசாயன நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தற்போது, கெலவரப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லை என்றாலும், கடந்த சில தினங்களாக தொழிற்சாலை கழிவுநீர் அதிகப்படியாக திறந்து விடப்படுகிறது.

இதனால் கெலரவப்பள்ளி அணையின் நீர்த்தேக்க பகுதியில், கருப்பு நிறத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் ரசாயனம் கலந்த தண்ணீரால், நுரை பொங்கி ஆற்றை மூழ்கடித்து செல்கிறது. நுரை காற்றில் பறந்து, பொதுமக்கள் மீது படும் போது, உடல் அரிப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த கால்வாய்களிலேயே நுரை பொங்கி எழுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post ரசாயன நுரையால் பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article