ரசமட்டம்

3 weeks ago 3

ஒரு ரசமட்டம் என்பது அளவிடும் கருவி ஆகும். இது ஒரு பரப்பு கிடைமட்டமாக(மட்டம்) அல்லது செங்குத்தாக (தூக்குக் குண்டு) இருப்பதை அறியப் பயன்படுகிறது. இதன் பல்வேறு வகைகளைத் தச்சர்கள், கல்கொத்து வேலை செய்பவர், கொத்தனார், கட்டடங்களை விற்பனை செய்பவர், நில அளவியல் செய்பவர், ஆலை அமைப்பாளர்கள், உலோக வேலை செய்பவர் மற்றும் ஒளிப்படவியல் துறையில் உள்ளவர்கள் எனப் பலரும் பயன்படுத்துகின்றனர். பரப்புகள் கிடைமட்டமாக இல்லாதபோது காற்றுக் குமிழி தனது மையப்பகுதியை விட்டு விலகிச் சென்றுவிடும்.

தண்ணீருக்குப் பதில் எத்தனால் என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது. மதுசாரத்தின் பிசுக்குமை மற்றும் மேற்பரப்பு இழுவிசை குறைவாக இருப்பதால், காற்றுக் குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடிக் குழலுடன் ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகாமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. காற்றுக்குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும் தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள் நிற நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கண்ணாடிக்குமிழ் புடைப்புரசமட்டம் (bull’s eye level) என்பது சாதாரணமான ரச மட்டத்தின் சிறப்புத் தயாரிப்பாகும். இது வட்ட வடிவிலும், தட்டையான அடிப்பாகத்தையும் கொண்டுள்ளது. இதனுள் திரவம் நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு வட்டத்தைக் கொண்ட குவி வடிவமுள்ள, கண்ணாடியிலான முகப்பு வைக்கப்பட்டுள்ளது. குழாய் வடிவ ரசமட்டம் அதன் திசையில் மட்டுமே கிடைமட்டம் பார்க்க உதவுகிறது. ஆனால், குமிழ் புடைப்பு ரசமட்டம், ஒரு பரப்பின் கிடைமட்டத் தன்மையைக் காண பயன்படுகிறது.

மெல்சிடெக் தவெனட் (Melchisedech Thevenot) என்ற பிரெஞ்சு அறிவியலாளர் 2 பிப்ரவரி 1661ஆம் ஆண்டுக்கு முன் இக்கருவியை உண்டாக்கினார். இந்தத் தகவல் கிறித்தியான் ஐகன்சுடன் அவர் அனுப்பிய கடிதங்கள் மூலம் அறியப்படுகிறது. பெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம் தான் அமெரிக்காவில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் வகையாகும். இது 1939ஆம் ஆண்டு வில்லியம்.பி.பெல் (William B. Fell) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் நவீன ரசமட்டங்கள் கைப்பேசியிலேயே (smart phones) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல மொபைல் செயலிகள் (mobile apps) வடிவமைக்கப்பட்டுள்ளன. OnlineBubbleLevel.com என்ற வலைத்தளம், இவ்வகைக் கருவிகளை இணையதளத்தின் மூலம் செயல்படுத்திட உதவுகிறது.

The post ரசமட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article