ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் நல்லவரா, கெட்டவரா? - கமல்ஹாசன் அளித்த சுவாரஸ்ய பதில்

7 hours ago 2

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் திரிஷா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது, கமல்ஹாசனிடம் "ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "இந்த படம் பார்த்தாலும் அவர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு பதில் கிடைக்காது. அக்கதாபாத்திரம் நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான். கணக்கிற்கு எது முக்கியம். பிளஸா, மைனஸா என்று கேட்டா என்ன பண்றது. அதுமாதிரி தான் இதுவும்" என்று சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார். 

Read Entire Article