யோகிபாபு விவகாரம் - வருத்தம் தெரிவித்த இயக்குனர்

3 hours ago 3

சென்னை,

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை.

அப்போது பேசிய தயாரிப்பாளர் ராஜா, இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு யோகி பாபு வராதது பெரிய கேவலமான விஷயம் என்றும் இந்த விழாவுக்கு வர யோகிபாபு ரூ. 7 லட்சம் பணம் கேட்டதாகவும் கூறினார். மேலும், படத்தின் வெளியீட்டுக்கு வரவில்லை என்றால் நடிகனாக இருக்கவே தகுதி இல்லை என்றும் கூறி இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்,  தயாரிப்பாளரின் இந்த கருத்துக்கு யோகி பாபு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு இயக்குனர் பிரபதீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதன்படி, "யோகிபாபு பற்றி தயாரிப்பாளர் பேசிய கருத்துக்கும் கஜானா திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.


Read Entire Article