யுபிஐ சேவையில் 2 புதிய மாற்றங்கள்

2 weeks ago 6

புதுடெல்லி: கடந்த 1ம் தேதி முதல் யுபிஐ சேவைகளில் இரண்டு முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ஆண்டுதோறும் 75% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த நிலையில் யுபிஐ பயனாளர்களுக்கு கடந்த 1 ம் தேதி முதல் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஆட்டோ டாப் அப் என்ற ஒரு புதிய அம்சம் யுபிஐ லைட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ ) அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் யுபிஐ லைட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச இருப்பு தொகையை யுபிஐ லைட்டில் வைத்துக் கொள்ளலாம். அந்த இருப்பு தொகை குறையும்போது தானாகவே யுபிஐ லைட்டில் அந்த பேலன்ஸ் சேர்ந்து விடும்.

யுபிஐ லைட் பயன்படுத்துபவர்கள் பின் நம்பரை வழங்காமல் 500 ரூபாய்க்கு உள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை யுபிஐ லைட்டில் பேலன்ஸ் ஆக வைத்துக் கொள்ள முடியும். யுபிஐ லைட்டின் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்கள் இப்போது தங்கள் யுபிஐ லைட் வாலட்டில் ரூ. 5,000 வரை இருப்பு வைத்திருக்க முடியும். முந்தைய வரம்பு ரூ.2,000 ஆக இருந்தது. யுபிஐ லைட்டுக்கான தினசரி செலவு வரம்பு ரூ.4,000 ஆக உள்ளது.

The post யுபிஐ சேவையில் 2 புதிய மாற்றங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article