யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து 3 மாவட்ட சுகாதார மையங்களில் ஆட்டிசம் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல்

1 week ago 5

சென்னை: தமிழகத்தில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஆட்டிசம் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ஏ.எஸ்.டி) என்பது ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது ஒரு நபர் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், தொடர்பு கொள்வது, கற்றுக் கொள்வது மற்றும் நடந்து கொள்வது போன்றவற்றை பாதிக்கிறது. ஆரம்பகால அடையாளம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஏ.எஸ்.டி உள்ள குழந்தைகளுக்கான விளைவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க முதற்கட்டமாக தமிழகத்தில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் குழந்தையின் ஆரம்ப கட்ட வளர்ச்சி பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக பொதுசுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கபட்டுள்ளது. இவ்வாறு பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

The post யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து 3 மாவட்ட சுகாதார மையங்களில் ஆட்டிசம் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article