சென்னை: யுஜிசி விதிகள் திருத்தம் தொடர்பாக இந்தியா கூட்டணி ஆளும் முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டைப் போன்று தங்கள் மாநில சட்டமன்றங்களிலும் யுஜிசி விதிகளை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டெல்லி, இமாச்சல், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
The post யுஜிசி விதிகள் திருத்தம் தொடர்பாக இந்தியா கூட்டணி ஆளும் முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.