சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்யும் வகையில் ஆளுநர் தேடுதல் குழுக்களை அமைத்தார். யுஜிசி உறுப்பினருடன் கூடிய தேடுல் குழுக்களின் நியமனத்தை அரசிதழில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் கோரியுள்ளார். இந்நிலையில், உயர்கல்வித்துறை மேற்குறிப்பிட்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கான தேடுதல் குழுக்களை அமைத்து அதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. யுஜிசி உறுப்பினர் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளார். அண்ணா, பாரதிதாசன், பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுக்களை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேந்தர் அறிவுறுத்தியுள்ளார். யுஜிசி உறுப்பினருடன் வேந்தர் அமைத்த தேடுதல் குழுக்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கைகளை அரசிதழில் வெளியிட அரசுக்கு கோரியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழு 3 பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும்: ஆளுநர் மாளிகை அறிக்கை appeared first on Dinakaran.