‘யார் அந்த சார்’ என்று கேள்வி எழுப்பினால் தமிழக அரசு பதற்றம் அடைவது ஏன்? - இபிஎஸ்

4 months ago 13

சென்னை: "யார் அந்த சார்? என கேள்வி எழுப்பினால், ஏன் இந்த அரசு பதற்றம் அடைகிறது. இந்த விவகாரத்தில், மாறி மாறி அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். யார் அந்த சார்? என்று கேட்டால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டியதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது. என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜன. 6) இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்வைத்து, சட்டப்பேரவை வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும், யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியவாறு வந்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவை வெளியே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article