சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.
2. தற்போது 2024-2025-ஆம் கல்வியான்டிற்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் UMIS (University Management Information System) என்ற இணையதளத்தில் (https://umis.tn.gov.in/) உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரி நிர்வாகங்கள் மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The post கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.