யாராக இருந்தாலும் வெளியே போலாம்..” உடைகிறதா பாமக..? ராமதாஸ் அறிவிப்பால் மைக்கை தூக்கி எறிந்த அன்புமணி!

3 weeks ago 5

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குகுழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா பட்டானூரில், பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சி தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, ஆலோசனை குழு தலைவர் தீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் என்பவரை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்திருந்தார். இது குறித்த அறிவிப்பை இன்று புதுவையில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிர்வாகியை ஏற்க அன்புமணி மறுத்ததால் பரபரப்பு தெரிவித்தார். நான் உருவாக்கிய கட்சி, இங்கு நான்தான் முடிவெடுப்பேன் என்று ராமதாஸ் ஆவேசமாக பேசினார். இது நான் உருவாக்கிய கட்சி என்று மூன்று முறை கூறிய ராமதாஸ், என் பேச்சை செயல்படுத்த வேண்டும். கட்சியில் விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என கூறினார். கட்சியில் சேர்ந்து 4 மாதம் ஆன முகுந்தனுக்கு பதவி எதற்கு என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். நான் சொல்றதை கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.

கட்சியைவிட்டு போவதாக இருந்தால் போ என அன்புமணியை நோக்கி ராமதாஸ் ஆவேசமாக கோரினார். பனையூரில் நான் புதிதாக தொடங்கியுள்ள அலுவலகத்தில் என்னை வந்து சந்திக்கலாம் என்று அன்புமணி தனியாக போர்க்கொடி தூக்கினார். எனது தனி அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்கலாம் எனக் கூறி தொலைபேசி எண்ணையும் மேடையிலேயே அன்புமணி அறிவித்தார். தனி அலுவலகம் திறந்து கொண்டு நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள் என்று அன்புமணியை நோக்கி ராமதாஸ் கூறினார்.

தொடர்ந்து கூட்டம் முடிந்து சென்ற ராமதாஸின் காரை பாமக தொண்டர்கள் மறித்து அன்புமணி வாழ்க என முழக்கமிட்டனர். பொதுக்குழு முடிந்தவுடன் வெளியேறிய அன்புமணியை சூழ்ந்து கொண்டு வாழ்க… வாழ்க… என பாமகவினர் முழக்கம் எழுப்பினர்.

The post யாராக இருந்தாலும் வெளியே போலாம்..” உடைகிறதா பாமக..? ராமதாஸ் அறிவிப்பால் மைக்கை தூக்கி எறிந்த அன்புமணி! appeared first on Dinakaran.

Read Entire Article