யானை தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தகவல்

3 months ago 11

திருச்செந்தூரில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. சிறிய அளவில் ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு நடந்ததாக, அந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read Entire Article