யாசகம் பெற்று சேமித்த ரூ. 10 ஆயிரத்தை கடலூர் கலெக்டரிடம் வழங்கிய முதியவர்

2 hours ago 1

கடலூர்: தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (73). இவர் தனது மனைவி இறந்த பின் பொதுச்சேவையில் ஈடுபட விரும்பி, யாசகம் பெற்று அப்பணத்தை பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வந்தார் மேலும் ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று சேர்த்த பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். இவர் தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் பூல்பாண்டி கடலூர் பகுதியில் யாசகம் மூலம் சேர்த்த ரூ.10 ஆயிரத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கி, அதனை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு கூறினார்.

இது குறித்து பூல்பாண்டி கூறுகையில், ‘நான் ஒவ்வொரு பகுதியிலும் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி வருகிறேன். தற்போது முதலமைச்சர் பொது நிவாரண பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று யாசகம் பெற்று உதவி வருகிறேன். நான் யாசகம் பெறுவதை குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறேன்’ என்றார்.

இதுவரை யாசகம் பெற்று ரூ.1 கோடி 60 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post யாசகம் பெற்று சேமித்த ரூ. 10 ஆயிரத்தை கடலூர் கலெக்டரிடம் வழங்கிய முதியவர் appeared first on Dinakaran.

Read Entire Article