டெல்லி:யமுனை நதி நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குரோமியம், துத்தநாக உலோகங்கள் அதிகளவில் கலந்துள்ளதாக நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பகுதியில் ஓடும் 40 கி.மீ. தூர யமுனை நதியில் உயிர்கள் வாழ உகந்ததாக இல்லை. ஹரியானாவில் 6 இடங்களில் எடுத்த நீர் சோதனையில் அதிக மாசு இருந்தது பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
The post யமுனை நதி நீரின் தரம் மிகவும் மோசம்: நிலைக்குழு அறிக்கை appeared first on Dinakaran.