மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2 hours ago 3

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை திமுக சட்டத்துறை வென்றது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி என்றும் தெரிவித்தார்.

The post மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article