பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட்: எவ்வளவு தெரியுமா?

2 hours ago 3

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, ரம்ஜான், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போதும் தொடர் விடுமுறைகளின் போதும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் விமான பயணத்தை கூட நாடுகிறார்கள்.

இது போன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிடுகிறது. அந்த வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ம் தேதியில் இருந்து ஜனவரி 19ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது. அதேபோல திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது. சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட்: எவ்வளவு தெரியுமா? appeared first on Dinakaran.

Read Entire Article