மோசமான வானிலை: மதுரையில் வானில் வட்டமடித்த விமானம்

7 months ago 24

மதுரை,

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 75 பயணிகளுடன் மதுரை நோக்கி இண்டிகோ விமானம் இன்று காலை வந்தது. அப்போது மோசமான வானிலை நிலவியதன் காரணமாக விமானத்தால் மதுரையில் தரையிறங்க முடியவில்லை.

மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத நிலையில் விமானம் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று கூறப்படுகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article