மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

3 months ago 12

டெல்லி: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை ஒட்டி பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். 1956 நவம்பர் 1ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறிய வாழ்த்து செய்தியில்; ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், சண்டிகர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு இன்று தனி மாநிலமாக உருவான நாள்.

இந்த துடிப்பான கலாச்சாரங்கள், பலதரப்பட்ட மொழிகள், வளமான வரலாறுகள் மற்றும் நீடித்த பாரம்பரியங்கள் ஆகியவை இந்தியாவின் வலிமையின் இதயம் மற்றும் நமது தேசத்திற்கு அதன் பின்னடைவை அளிக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, இந்த ஒற்றுமையைக் கொண்டாடுவோம் மற்றும் பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா, மத்திய பிரதேச, அரியானா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துகளை அந்த அந்த மொழியில் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

The post மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article