மொழிக் கொள்கை விவகாரம்; மத்திய அரசின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

2 months ago 17

மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரோடு தொடர்பில் இருக்கிறார் என்று நன்றாகவே தெரியும். நீட் ரகசியம் தெரியும் என்று சொன்னவர் துணை முதல்வர் உதயநிதி. அவர்களோடு தொடர்பில் இருந்து இவருக்கும் நோய் ஒட்டிக் கொண்டது. இதனாலேயே அவர் சில ரகசியங்கள் இருக்கின்றன என்கிறார். அப்படியானால் சொல்ல வேண்டியது தானே. ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை தான் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் செய்கின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் எடுபடாது.

Read Entire Article