மைனர் பெண்ணுடன் சுற்றுலா போக்சோவில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

2 weeks ago 4

சென்னை: ஸ்னாப் ஷாட் மூலம் அறிமுகமான மைனர் பெண்ணை சுற்றுலா அழைத்துச் சென்று, போக்சோ சட்டத்தில் கைதான இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞருக்கு ஸ்னாப் ஷாட் சமூக வலைதளம் மூலம் சேலத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் பழகிய நிலையில் வீட்டுக்கு தெரியாமல் சென்னைக்கு வந்த அந்த மைனர் பெண்ணை அழைத்து சிலம்பரசன் சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தனது மகனை காணவில்லை என்று சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவில், நட்பு ரீதியாகதான் அழைத்து சென்றதாகவும் எந்த ஒரு பாலியல் தொந்தரவும் செய்யவில்லை என்றும் எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post மைனர் பெண்ணுடன் சுற்றுலா போக்சோவில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article