மைனராக இருந்தாலும் கருவை கலைப்பதில் சிறுமியின் விருப்பத்தை அறிய வேண்டும்: ஐகோர்ட் கருத்து

19 hours ago 2

சென்னை: மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி விருப்பத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அச்சிறுமியின் 24 வார சிசுவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மகளின் கர்ப்பத்தை கலைக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஜனவரி 7ம் தேதி தன்னுடைய 16 வயதுடைய மகள் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. கர்ப்பத்தை கலைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் மாவட்ட அரசு மருத்துவமனை மகளை அனுமதித்தேன்.

அங்கு மகளின் கர்ப்பம் 24 வாரம் கடந்து விட்டதாக கூறி கருவை கலைக்க நீதிமன்றம் தான் உத்தரவிட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி குழந்தை பெற்றுக் கொள்வது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அந்த மைனர் பெண்ணுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக போக்சோ வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அந்த சிசுவை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

The post மைனராக இருந்தாலும் கருவை கலைப்பதில் சிறுமியின் விருப்பத்தை அறிய வேண்டும்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article