மைசூரு தசரா முடிந்த பின்னர் 22 டன் பிளாஸ்டிக் அகற்றம்

1 month ago 6

மைசூரு ஜம்போசவாரி ஊர்வலத்தை அடுத்து, நகரம் முழுவதும், குறிப்பாக ஊர்வல வளாகம், பிரதான சாலை என அனைத்துமே பிளாஸ்டிக் மயமாக காணப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் 80 டன் குப்பைகளை சேகரித்தனர். இதில் 22 டன் பிளாஸ்டிக் கழிவுகள். அரண்மனை வளாகம், ஊர்வலம் செல்லும் பாதை, மகாராஜா கல்லூரி மைதானம், குப்பண்ணா உத்யன் ஆகிய இடங்களில் மலர் கண்காட்சி, உணவுக் கண்காட்சி நடந்த இடங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்திருந்தன.

கடந்த 3ம் தேதி துவங்கிய தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருந்து தினமும் 45 டன் முதல் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. தசரா துப்புரவு பணிக்கு மாநகராட்சி தினசரி பணியாளர்கள் தவிர 500 பேர் தற்காலிகமாக பணியமர்த்தியது. இந்த ஊழியர்கள் தசராவின் போது 24 மணி நேரமும் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றினர். இவர்களின் சேவை இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. மேலும், நகரை முழுமையாக சுத்தம் செய்ய உள்ளோம்,’ என, மாநகராட்சி சுற்றுச்சூழல் துறை ஏஇஇ, கே.எஸ்.மிருத்யுஞ்சயா தெரிவித்தார்.

The post மைசூரு தசரா முடிந்த பின்னர் 22 டன் பிளாஸ்டிக் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article