திருத்தணி: திருத்தணி அருகே முருக்கம்பட்டு ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் குணசுந்தரி பொன்னுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து கிராம வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து மேல்முருக்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பிடம், விளையாட்டு மைதானம் அமைத்துதரவேண்டும். அரசின் திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஊராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், பணி மேற்பார்வையாளர் ராஜேந்திரபாபு, கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், ஊராட்சி செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மேல்முருக்கம்பட்டு அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.