திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், படூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கேளம்பாக்கம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கட்டப்பட்டுள்ள ரூ.57 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள வட்டார பொது சுகாதார வளாகம், கொட்டமேடு மற்றும் கீழூர் ஊராட்சிகளில் தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் கீழூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், மேலையூர் ஊராட்சியில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரம் செலவில் உபரிநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் மற்றும் ரூ.1 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் வரவேற்றார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடங்கள், ஊராட்சி செயலக கட்டிடங்கள், கலையரங்கம் போன்றவற்றை திறந்து வைத்தும், சாலை மற்றும் பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், சார் ஆட்சியர் நாராயணசர்மா, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிபாஸ்கர், பூமகள்தேவி, ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலக்கோட்டையூர் கௌதமி ஆறுமுகம், படூர் தாரா சுதாகர், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், பனங்காட்டுப்பாக்கம் தனசேகரன், கீழூர் பிரபாவதி பரந்தாமன், கொட்டமேடு சசிகலா, நெல்லிக்குப்பம் பார்த்தசாரதி, மேலையூர் கோமதி செந்தில்குமார்,
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், அருண்குமார், வெண்ணிலா தி.மு.க. நிர்வாகிகள் அன்புச்செழியன், ராஜாராம், மயில்வாகனன், கருணாகரன், எஸ்.எம்.ஏகாம்பரம், கெஜராஜன், பார்த்தீபன், ஜெயபால், பாஸ்கர், பாளையம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம்: குன்றத்தூர் நகராட்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 90 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.33.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசால் சென்ற ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி சமூக பங்களிப்பு நிறுவனங்களின் நிதியுதவி மூலம் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் வகையில் 67 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களும், 23 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.23.41 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும் என மொத்தம் 90 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.33.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, மாற்றுத்திறனாளி பயனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், குன்றத்தூர் நகரமன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மேலையூர் ஊராட்சியில் ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.