மேலூர், ஏப்.2: மேலூரில் திரையிடப்பட்ட எம்புரான் திரைப்படத்தை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிறுத்துவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ‘எம்புரான்’ வெளியானது. இப்படத்தில் மதுரை உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ள பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து உள்ளதாக பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சி வைத்ததற்கு தென் தமிழக விவசாயிகளிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை வெளியிடுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். எம்புரான் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்குகளில் அப்படத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில், எம்புரான் திரைப்படம் பெரியாறு விவசாயிகளின் மனதை புண்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்தும், விவசாயிகளின் உணர்வு பூர்வமான கோரிக்கையை ஏற்றும், எம்புரான் திரைப்படத்தை மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளதை நிறுத்துவதாக திரையரங்கு நிர்வாகம் நேற்று தெரிவித்து உள்ளது.
The post மேலூர் தியேட்டரில் எம்புரான் திரைப்படம் நிறுத்தம்: திரையரங்கு நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.