மேலும் 2 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டு கொலை: ராணுவ மோப்ப நாயும் உயிரிழந்த சோகம்

3 months ago 12


ஜம்மு: ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தானை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, நேற்று முன்தினம் இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, மூன்று தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு விட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ஒரு பயங்கரவாதியை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அக்னுார் பகுதியில் உள்ள காட்டுக்குள் தப்பியோடிய மற்ற இரு தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று அந்த தீவிரவாதிகள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை ராணுவத்தின் மோப்ப நாயான பாண்டம் அடையாளம் காட்டியது. ஆனால், தீவிரவாதிகள் சுட்டதில் அது பரிதாபமாக உயிரிழந்தது. இது, பெல்ஜியம் நாட்டின் மாலினோய்ஸ் எனப்படும் உயர் வகை நாய் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மேலும் 2 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டு கொலை: ராணுவ மோப்ப நாயும் உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article