பொன்னமராவதி, ஜூலை 9: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் சுவாமி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில், கடந்த 29-ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, மண்டகபடிதாரர்கள் சார்பில் நாள்தோறும் அம்மன் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பால்குடம், திங்கள் கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. நேற்று திருவிழாவின் கடைசிநாளான மஞ்சள் நீராட்டு விழா மேளதாளம் முலங்க வான வேடிக்கையிடம் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில், மேலத்தானியம் மற்றும் எட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post மேலத்தானியம் முத்து மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா appeared first on Dinakaran.