பாலக்கோடு, பிப்.24: காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம், அவைத் தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய பொருளாளர் செந்தில், துணை செயலாளர்கள் நடராஜ், சுமதி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரம், பெரியண்ணன், கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கை திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பை கண்டித்தும், மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேருக்கு வேட்டி -சேலை மற்றும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஹரி பிரசாத், ராமமூர்த்தி, சக்தி, சலிம், குணா, துரைமுருகன், மாதேஸ்வரன், பார்த்தீபன், ஒன்றிய இளைஞரணி சிதம்பரம், பெருமாள், சாதிக், தங்கவேல், மகேந்திரன், முருகன், பிடிஏ தலைவர் முனிரத்தினம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப அணி வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
The post மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.