மணிலா: பிலிப்பைன்ஸில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ மேயர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்பேரில் ரோட்ரிகோ கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிலிப்பைன்சில் மேயர் உட்பட , உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் அதிபர் ரோட்ரிக்கோவும் மேயர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
இவர் டாவோ மேயராக வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 20 ஆண்டுகளுக்கு முன் ரோட்ரிகோ அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் மேயராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் சட்டத்தின்படி கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளவர்கள், தடுப்பு காவலில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்.
The post மேயர் பதவிக்கு போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் appeared first on Dinakaran.