டெல்லி: மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த 24-ந் தேதி ஆமதாபாத் அருகே கட்டுமான பணியின்போது கிரேன் நழுவி அருகில் உள்ள ரயில் பாதையில் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியம் பாதுகாப்பு குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் மேற்கு ரயில்வேயில் கர்டர் பொருத்தியபோது நடைபெற்ற விபத்து குறித்தும் ரயில்வே வாரியம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. சாலை மேம்பால கட்டுமான பணிகளின்போது விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
குறிப்பாக கிரேன்கள் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கிரேன்களின் தாங்குதிறன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அடுத்த 10 நாட்களில் ஏதேனும் மேம்பால கர்டர் பொருத்த வேண்டி இருந்தால் அதுபற்றி உரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் தகவல் அளித்துள்ளது.
The post மேம்பால கட்டுமான பணியில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: ரயில்வே வாரியம் தகவல் appeared first on Dinakaran.