மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் தடுப்புச் சுவரில் மோதி விபத்து

3 months ago 14
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, சாலையில் திரும்பிய போது, அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. முன்பக்க டயர்கள் தனியாக கழன்றதுடன், பஞ்சு பொதிகளும் சாலையில் சிதறி விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், விபத்து குறித்து கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article