வாஷிங்டன்: மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீபற்றி எரிந்தது. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னதாக வாஷிங்டன் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்ட்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.