மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,355 கனஅடியாக சரிவு

2 months ago 14

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 8,500 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில், நீர்வரத்து நேற்று 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

Read Entire Article