மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17,596 கனஅடியாக அதிகரிப்பு

3 months ago 23

சேலம்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,445 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்றுவிநாடிக்கு 17,596 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்கு வெளியேற் றப்படுவது விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 89.26 அடியாக இருந்த நிலையில், நேற்று89.92 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 52.55 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.

Read Entire Article