சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,860 கனஅடியில் இருந்து 53,205 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 93.200 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,200 கனஅடியும் 16 கண் மதகு வழியாக 17,800 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
The post மேட்டூர் அணை நீர்வரத்து 53,205 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.