மேட்டூர் அணை உறுதியாக உள்ளது: திட்டக்குழு தகவல்

2 hours ago 1


மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட மேற்பார்வை பொறியாளர் வீரலட்சுமி, செயற்பொறியாளர் வடிவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அணையின் வலதுகரையில் உள்ள நில அதிர்வு கண்காணிப்பு அறையில், சுமார் 30 நிமிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டூர் அணை நல்ல உறுதியுடன் உள்ளது, அணை நிரம்பிய நிலையில் இருந்தபோதும், நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியபோதும் எவ்வித அதிர்வுகளும் பதிவாகவில்லை’ என தெரிவித்தனர். மேட்டூர் நீர்வளத்துறை பணியாளர்களுக்கு நில அதிர்வை கணக்கிடும் முறை, அதனை கண்டறியும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

The post மேட்டூர் அணை உறுதியாக உள்ளது: திட்டக்குழு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article