
புளோரிடா,
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
சான் பிரான்சிஸ்கோ தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 80 ரன்கள் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ அணி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சைதேஜா முக்கமல்லா 34 ரன் எடுத்தார்.