மேஜர் முகுந்த் பிறந்தநாளையொட்டி "அமரன்" படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்

1 day ago 4

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாயிற்று. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்திற்கு பல உயரிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக கலாச்சார திரைப்பட விழாவில் 'அமரன்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்கள் லிஸ்டில் 'அமரன்' திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மேலும் பல விருதுகளையும் அமரன் திரைப்படம் தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மேஜர் முகுந்த் பிறந்தநாளையொட்டி "அமரன்" படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. "உலகிற்கு, அவர் ஒரு ஹீரோ.அவரது குடும்பத்திற்கு, ஒரு இதயத் துடிப்பு. நாட்டிற்கு அவர் ஒரு ஜாம்பவான். மேஜர் முகுந்த் வரதராஜனுக்ககு பிறந்தநாள் வாழ்த்து. " என்று கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

"To the world, he was a Hero.To his family, a Heartbeat.To the nation, a Legend."Saluting the Birth Anniversary of Major. Mukund Varadarajan — the spirit of #Amaran lives on.#MajorMukundVaradarajan#AmaranMajorSuccess #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavipic.twitter.com/b0j1NOaxq7

— Raaj Kamal Films International (@RKFI) April 12, 2025
Read Entire Article