எனக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது கொடுக்கிறார்கள்?..? மகேந்திரசிங் தோனி

1 day ago 4

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

தலா ஒரு ஸ்டம்பிக், கேட்ச் மற்றும் ரன் அவுட் உட்பட இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய மகேந்திரசிங் தோனி, "எனக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது கொடுக்கிறார்கள்? நூர் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்" என்று கூறினார்.

அவர் கூறுவது போல நூர் அகமது விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

Read Entire Article