மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

3 months ago 22

ஷில்லாங்: மேகாலயாவில் கனமழை வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். மேகாலயாவில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தெற்கு கரோ மலை, கசுவாபாரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.  இந்நிலையில் கசுவாபாரா மாவட்டம் ஹதியாசியா சோங்மா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி விட்டனர்.

மேலும் மற்றொரு நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்து விட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து மேகாலாயா முதல்வர் கான்ராட் கே சங்மா தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கனமழை, வௌ்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீடக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உடனே நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article