திண்டுக்கல், ஏப். 29: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் மே 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post மே 1ம் தேதி கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.