
சென்னை,
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை(மே 18) காலை பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக பூமி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாகிஸ்தான், சீனா எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கிய ரிசாட்-1பி ரேடர் இமேஜிங் செயற்கைகோள்.
இந்தநிலையில், ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி - சி 61 ஏவப்பட உள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க மீனவர்கள் மே 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.