மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகசங்கள்.. பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்கியது

3 months ago 15

பெங்களூரு,

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி மற்றும் ராணுவ கண்காட்சியாகக் கருதப்படும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி இதுவரை 14 தடவை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15-வது விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்ச்சியை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார், பாதுகாப்பு படைத் தலைவர், முப்படைத் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழுவின் பிஏஇ ஹாக் எம்கே-132 ரக சிறிய ரக விமானங்கள், தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ணப்பொடிகளை வானில் தூவி அலங்கரித்தபடி சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

#WATCH | Aero India 2025 | Bengaluru: Surya Kiran Aerobatic Team's BAE Hawk Mk 132 take off giving out colors of the National Flag, as spectators look on. pic.twitter.com/jvMSWLbCks

— ANI (@ANI) February 10, 2025

இந்திய விமானப்படையின் இலகு ரக விமானமான தேஜாஸ் மார்க் 1ஏ மற்றும் போர் விமானமான சுகோய் சு-30 எம்கேஐ போன்ற விமானங்கள் வானில் மாயாஜாலங்களை நிகழ்த்தின. விமான சாகசங்களை கண்டுகளிக்க ஏராளமான பார்வையாளர்கள்  திரண்டுள்ளனர்.

இதுதவிர பாதுகாப்புத் துறை மந்திரிகள் மாநாடு, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை மாநாடு, இந்தியா & ஐடெக்ஸ் அரங்குகளின் திறப்பு விழா மற்றும் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன.

14-ம் தேதி வரை 5 நாட்கள், தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

42,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறும் கண்காட்சியில், 150 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன.

Read Entire Article